close
Choose your channels

விக்ரம் மகனுக்கு கைகொடுக்கும் சூர்யா

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்து நடித்த 'பிதாமகன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து முடித்துள்ள 'வர்மா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது நடந்து வரும் நிலையில் இம்மாதம் 9ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

துருவ் விக்ரம், மேகா, ஈஸ்வரிராவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவும் சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை முகேஷ் மேத்தா தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.