close
Choose your channels

விஜய் பாணியில் உருவாகியுள்ளதா 'விஐபி 2' டைட்டில்?

Saturday, October 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலையில்லா பட்டதாரி படத்துக்குப் பிறகு இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'விஐபி 2' என்று கூறப்படும் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் இன்று இரவு அறிவிக்கப்படும் என தனுஷ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில்ற்கு 'தமிழ் மகன்' என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் 'தமிழ்' என்ற கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் இரண்டு வேடங்களில் நடித்த ஒரு படத்திற்கு 'அழகிய தமிழ்மகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விஜய் பாணியில் 'தமிழ் மகன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து கூறி வருகின்றனர். இன்று இரவு டைட்டிலுடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார், சதீஷ், மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்த விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.