close
Choose your channels

விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் கவலை

Friday, March 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தேவரகொண்டா, இன்று ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா ஓய்வின்றி தொடர்ச்சியாக இரவுபகலாக நடித்ததால் சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முழு ஓய்வு எடுத்தால் குணமாகிவிடுவார் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளிவந்ததில் இருந்து அவரது ரசிகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

விஜய் தேவரகொண்டா தற்போது 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதில் உள்ள லிப்கிஸ் முத்தக்காட்சியால் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விஜய் தேவரகொண்டா 'ஹீரோ' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் உள்பட 4 மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தை எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கவுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.