close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு மேலும் 3 திரைப்படங்கள்

Thursday, September 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் பிசியான கதாநாயகன் என்றால் அது விஜய்சேதுபதிதான். இந்த ஆண்டு ஏற்கனவே சேதுபதி', 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் வெளியாகி அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் வரும் அக்டோபர் 7ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த 'றெக்க' வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தருடன் ஒரு படத்திலும், தனுஷின் 'வடசென்னை' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்
இந்நிலையில் விஜய் சேதுபதியின் மேலும் மூன்று புதிய படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செலவம் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்திலும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் 'விக்ரம் வேதா' என்ற படத்திலும், 'இதற்க்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், இந்த படங்களின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
2016 போலவே 2017ஆம் ஆண்டிலும் பிசியான ஹீரோவாக விஜய்சேதுபதி வலம் வருவார் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.