close
Choose your channels

அன்னை மண்ணின் குளிரை அமெரிக்காவில் உணர்கிறேன்: விஜயகாந்த்

Monday, January 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தாலும் அவ்வபோது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து சமூகவலைத்தளங்கள் மூலம் கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் அவ்வப்போது அமெரிக்காவில் தான் இருக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம், அக்வாமேன் படம் பார்த்தது உள்பட விஜயகாந்த் பதிவு செய்த ஒருசில புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடுங்குளிர் வாட்டியெடுத்து வரும் நிலையில் இதுகுறித்தும் தனது டுவிட்டரில் விஜயகாந்த் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது என்று கூறி விஜயகாந்த் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் வழக்கம்போல் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.