close
Choose your channels

பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகள். முழுவிபரம்

Monday, October 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 42 வாக்குறுதிகளை பாண்டவர் அணியினர் அளித்துள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

1.நீதிமன்றாத்தில் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சங்க நிலத்தை மீட்டெடுபோம்.

2. செயற்குழு, பொதுக்குழுவின் ஒப்புதலோடு SPI ஒப்பந்தத்தை ரத்து செய்து, நமது சங்க நிலத்தை நமதாக்குவோம்.

3. அறக்கட்டளையின் சட்டத்திற்கு புறம்பாக, 2 பேர் மட்டுமே கொண்டு செயல்பட்ட அறக்கட்டளையை, சட்டப்படி மூத்த கலைஞர்களை கொண்டு 9 பேரை நியமிப்போம்.

4. நமது சங்க நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட வெளிப்படையான அணுகுமுறையுடன் சிறப்புக்குழு அமைத்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

5. கட்டப்படும் புதிய கட்டிடம், நமது சங்க உறுப்பினர்களுக்கு பயன்பெறும் வகையில் அரங்கமும், அதே சமயம் வருமானம் தரும் வகையிலும் சிறப்புக்குழு அமைத்து திட்டமிடப்படும்

6. கட்டிடம் கட்டுவதற்கும், நலத்திட்ட உதவிகளுக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த 'பாண்டவர் அணி' சார்பில் உடனடியாக ஒரு திரைப்படம் எடுத்து நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்

7. இதுவரை கடந்த நிர்வாகத்தால் செய்யப்பட்ட செலவுகளை மீண்டும் தணிக்கை செய்து தவறுகள் சீர் செய்யப்படும். அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

8. நடிகர் சங்கத்தில் உறுப்பினராக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டும். ARO-க்களை துணை விதிகளின் கீழ் கொண்டுவந்து அவர்களை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதோடு, அவர்களின் பணி, செயல், பணப்பட்டுவாடா அனைத்தும் முறைப்படுத்தப்படும்

9. திரைத்துறையில் ARO மூலம் செல்லும் துணைக்கலைஞர்களுக்கு படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாகவோ, அல்லது சங்க வழிச்சம்பளமாகவோ கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்

10. முறைப்படுத்தப்படாமல் இருக்கும் உறுப்பினர் பட்டியல்களை, புகைப்படத்துடனு முழுவிவரமும் முறைப்படுத்தப்படும்

11. நடிகர் சங்கத்திற்கென இணையதளம் உருவாக்கப்படும். அதன் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர், தயாரிப்பு நிர்வாகி இவர்களுக்கு பரிந்துரை செய்து உரியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வாங்கித்தரப்படும்.,

12. நடிகர் சங்கத்தின் உள்ளே உணவகம் ஒன்று உருவாக்கப்படும். அதில் குறைந்த விலையில் உறுப்பினர்களுக்கு உணவு வழங்கப்படும்.

13. நமது சங்க உறுப்பினராக உள்ள நாடகக்கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் செய்து தரப்படும்.

14. துணை நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பைத்தரும் சின்னத்திரை நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, மேலும் வாய்ப்பை பெற்றுத்தர சின்னத்திரை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பரிந்துரை செய்வோம்.

15. சின்னத்திரையில் உள்ள நமது சங்கத்தை சார்ந்த நடிகர்களுக்கு பெரிய திரையில் வாய்ப்பை பெற்றுத்தர திட்டமிடப்படும்.

16. உறுப்பினர்களின் சந்தாதொகையை வருடாவருடம் புதுப்பிப்பதற்கு பதிலாக, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்குமாறு பொதுக்குழு விதிகள் திருத்தப்படும்.

17. 25 வருடம் தொடர்ந்து சந்தா கட்டிய தொழில்முறை நடிகர்கள் ஆயுட்கால உறுப்பினர்களாக சட்டவிதிகள் திருத்தப்படும்

18. ஈமச்சடங்கு உதவி, திருமண உதவி, கல்வி உதவி போன்றவை உயர்த்தி கொடுக்கப்படும்.

19. மூத்த நாடக நடிகர்களுக்கு மாதமாதம் ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக உள்ள ரூபாயின் மூலம் வரும் வருமானத்தில் வழங்கப்படும்.

20. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், குறிப்பிட்ட மருத்துவமனையில் முழு உடற்பரிசோதனை செய்ய உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்

21. குடும்பத்தால் கைவிடப்பட்ட மூத்த கலைஞர்களுக்கு சங்கம் சார்பாக ASSOCIATION OLD AGE HOME ஒன்று உருவாக்கி அதில் தங்கவைத்து பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

22. பொருட்காட்சியை சார்ந்து இருக்கின்ற நாடக நடிகர்களின் ஊதியத்தை அரசாங்கத்திடம் பேசி உயர்த்தி தர முயற்சி எடுக்கப்படும்.

23. தமிழகமெங்கும் நாடக உலகை சார்ந்து இருப்பவர்கள் வெளியூர் பயணம் செய்ய ரயில் பயணத்தில் உள்ளதுபோல அரசு பஸ்களில் சலுகைக்கட்டணம் பெற்றுத்தர முயற்சி செய்வோம்.

24. வெளிமாநிலங்களில் உள்ள நடிகர் சங்கங்களில் உள்ள சிறப்பு திட்டங்களை கண்டறிந்து நமது சங்கத்தில் அவைகளை செயல்படுத்துவோம்.

25. தமிழகமெங்கும் உறுப்பினராக உள்ள நாடக கலைஞர்களின் வேடத்திற்கு ஏற்ப, புதிய உடை, மேக்கப் (சிகை அலங்காரம்) இசைக்கருவிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

26. தொன்மையான நாடக கலைகளை வளர்த்து வரும் சிறந்த இரண்டு நாடக குழுவையும், சிறந்த நடிகர்களில் மூன்று பேரையும் வருடா வருடம் தேர்ந்தெடுத்து 'சுவாமி சங்கரதாஸ் கலைஞர்' என்ற விருதும் ஊக்கத்தொகையும் கொடுத்து கவுரவிக்கப்படுவார்கள்.

27.மத்திய, மாநில அரசு விருதுபெறும் திரைப்படக் கலைஞர்களை சங்கத்தின் மூலம் கெளரவப்படுத்தி பாராட்டு விழா நடத்தப்படும்

28. வெளியூர் நாடக கலைஞர்கள் சென்னையில் வந்து தங்குவதற்கு தங்கும் வசதிகள் செய்து தரப்படும்.

29. திறமையுள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய கலைமாமணி, பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ர் விருதுகளுக்கு தகுதியானவர்களை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்வோம்.

30. நாடகம் இல்லாத கால கட்டங்களில் 'நாடக கலைஞர்களுக்கு சினிமா வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

31. நடிகர் சங்கத்திற்குள் கேமரா, எடிட்டிங், இசை சேர்ப்பு கொண்ட ஒரு திரைப்பட பிரிவு உருவாக்கப்படும். அதில் இளம் நடிகர்களை கொண்டு நாடகம், திரைப்படம் சார்ந்த மூத்த கலைஞர்களை பேட்டி எடுத்து ஆவணப்படம் உருவாக்கப்படும்.

32. நமது சங்க நிலத்தை அடமானம் வைக்காமலே மாதம் 30 லட்சத்திற்கு மேல் வருமானம் வருவதுபோல் திட்டங்கள் தீட்டப்படும்

33. நடிகர் சங்கத்தின் மூலம் 'சின்னத்திரை' தொடர் எடுத்து அதன்மூலம் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும், சங்க ஒருளாதாரமும் உயர திட்டமிடப்படும்.

34. இரண்டு டப்பிங், எடிட்டிங் தியேட்டர் நடிகர் சங்க கட்டிடத்தில் கட்டப்படும்.

35. விளம்பரப்படம் எடுப்பதற்கான புளுமேட் அரங்கம் உருவாக்கப்படும்.

36. 10 கேரவன்கள் வாங்கி வாடகைக்கு விடப்படும்

37. CCL மூலம் வருகின்ற தொகையை அந்நிறுவனத்திடம் உயர்த்தி கேட்கப்படும். அத்துடன் தனிப்பட்ட முறையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி நிதி திரட்டப்படும்.

38. நடிகர் சங்க நிலத்திற்காக முதலில் குரல் கொடுத்த திரு.பூச்சிமுருகன், திரு.குமரிமுத்து, திரு.காஜாமொய்தீன், திரு.ஆர்.எம்.சுந்தரம் ஆகியோர் மேல் நடிகர் சங்கம் போட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்.

39. திரு.ஜேப்பியார், திரு.ஐசரிகணேஷ் மூலம் உதவித்தொகை பெற்றுவரும் உறுப்பினர்களின் உதவித்தொகை உயர்த்த முயற்சி எடுக்கப்படும்.

40.SRM நிறுவனர் திரு.பச்சமுத்து அவர்கள் மூலம் நமது உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள் வாங்கித்தரப்படும்.

41. நமது நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்களின் மேற்படிப்பிற்கான உதவிகளும் நமது சங்கத்தின் மூலம் செய்து தரப்படும்.

42. 'குருதட்சணை' என்ற பெயரில் ஒரு சிறப்புத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முதல் பொதுக்குழுவில் அறிவிப்போம்.

இவ்வாறு பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.