close
Choose your channels

இன்று 'விஸ்வாசம்' ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து

Sunday, December 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் 'வேட்டி கட்டு' பாடல் நேற்று வெளியாகி யூடியூப் இணையதளத்தில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த பாடல் வெளியான 12 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகவுள்ளது. எந்தவித விழாவும் இன்றி இணையதளத்தில் பாடல்கள் வெளியாகவுள்ளது என்பதும் இருப்பினும் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இனிவரும் ஒவ்வொரு தினமும் 'விஸ்வாசம்' குறித்த செய்திகளை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.