close
Choose your channels

நாளை மற்றும் நாளை மறுநாள்: அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் யோகிபாபுவின் 2 படங்கள்..!

Wednesday, January 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை ஜனவரி 25 மற்றும் நாளை மறுநாள் ஜனவரி 26 ஆகிய இரண்டு நாட்களிலும் அடுத்தடுத்து யோகி பாபு ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த படங்களின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு நடிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’தூக்குதுரை’. யோகி பாபு, இனியா, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் நாளை அதாவது ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் யோகி பாபு ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படம் ’லோக்கல் சரக்கு’. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் இணைந்து நடித்த இந்த படத்தை எஸ்பி ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

இரண்டு படங்களுமே காமெடி கதை அம்சத்தை கொண்டு இருப்பதால் குடியரசு தின விருந்தாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யோகி பாபு கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து அவருடைய மற்ற படங்களும் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.