close
Choose your channels

'விவேகம்' படத்தின் 3வது பாடல் குறித்து அனிருத்

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் 'சர்வைவா மற்றும் 'தலை விடுதலை' பாடல்கள் இணையதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பாடல் குறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியபோது, 'சர்வைவா பாடலுக்கும் தல விடுதலை பாடலுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு பாடல்களை விட அடுத்தப் பாடல் வித்தியாசமாக இருக்கும். அது கர்நாடிக் இசை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது' என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகள் அதிக உற்சாகத்துடன் செய்துவருகிறேன். அஜீத் கலக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள். இயக்குனர் சிறுத்தை சிவா, பாடலுக்கான டியூன்களை சொல்லிவிட்டு, பரிசோதனை முயற்சிக்கு என்னை விட்டுவிடுவார். அதனால்தான், தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது` என்று கூறினார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.