close
Choose your channels

ராகவா லாரன்ஸ் மிஸ் செய்ததை சமுத்திரக்கனி செய்வாரா?

Wednesday, April 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா', மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் பின்னர் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேசி முடிவு செய்து வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் செய்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சமுத்திரக்கனி நடித்த 'கொளஞ்சி' மற்றும் சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'தொண்டன்' ஆகிய இரண்டு படங்களும் வரும் மே 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இன்றைய தினசரிகளில் விளம்பரம் வந்துள்ளது.
மே 5ஆம் தேதி சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் வெளியாகுமா? அல்லது கடைசி நேரத்தில் தேதிகள் மாற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.