close
Choose your channels

'அஜீத் 57' படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்குகிறதா?

Sunday, July 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாக்சி டிரைவராக அஜீத்தும், வழக்கறிஞராக ஸ்ருதிஹாசனும் நடித்து வரும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜீத் 57' படம் குறித்த ஒருசில தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு அஜீத் 57' படத்தை தயாரிப்பது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் என்பது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் T.G.தியாகராஜன் ஏற்கனவே கமல் நடித்த மூன்றாம் பிறை, விஜயகாந்த் நடித்த ஹானஸ்ட் ராஜ், வினய் நடித்த ஜெயம்கொண்டான் உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'அஜீத் 57' படத்தை 'பில்லா' இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் செய்யப்படவில்லை. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அதே வருடத்தின் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.