close
Choose your channels

ஓவியா பற்றி கமல் கூறும் புரமோ வீடியோ என்ன தெரியுமா?

Saturday, August 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய விவகாரம் காரணமாக அந்த சேனலை மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும் ஓவியா ஆர்மியினர் விமர்சனம் செய்து வந்தார்கள்.

சல்மான்கான் போல் கமல்ஹாசன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், குறிப்பாக காயத்ரியை அவர் கண்டிப்பதில் தயக்கம் காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் புரமோ வீடியோ வெளியிடாத அந்த சேனல் சற்றுமுன் ஒரு புரமோவை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் 'கலங்கிய உள்ளம், புலம்பிய நெஞ்சம், துலங்குமா உண்மை' என்று கூறியுள்ளார்.

வழக்கம்போல் கமல்ஹாசன் முழுதாக புரியாதவாறு பொடி வைத்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி பின்னணி இசையும் சோகமாக உள்ளது. எனவே என்ன நடந்தது? என்ன நடக்க போகிறது? என்பதை இன்று இரவு அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.