close
Choose your channels

11 வித்தியாசமான கெட்டப்பில் 'காஷ்மோரா' கார்த்தி?

Sunday, September 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மெட்ராஸ், கொம்பன் வெற்றி படங்களை அடுத்து கார்த்தி தற்போது நாகார்ஜுனனுடன் 'தோழா' மற்றும் நயன்தாராவுடன் 'காஷ்மோரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்திலும் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'காஷ்மோரா' படத்தில் கார்த்தி 11 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகவும் இந்த 11 கெட்டப்புகளையும் 11 விதமான செட்களில் படமாக்க இயக்குனர் கோகுல் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் கோகுல் ஏற்கனவே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா` என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காஷ்மோரா' படத்திற்காக மூன்று செட்கள் தற்போது தயாராகி அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் மீதி 8 செட்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா ஒரு முக்கிய கேரக்டரிலும், கார்த்தியின் தந்தையாக காமெடி நடிகர் விவேக்கும் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.