close
Choose your channels

சீனாவில் தொடங்கிய '2.0' புரமோஷன்

Saturday, June 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

இந்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்ததுடன் இந்த படம் சீனாவில் 58 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீனாவில் '2.0' படத்தின் புரமோஷன் பணி தொடங்கிவிட்டது. சீன தொலைக்காட்சிகளில் '2.0' படம் குறித்த செய்திகள் சீன மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சீனாவில் இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் இப்பொழுது முதலே படத்தை முழு அளவில் புரமோஷன் செய்து வருகின்றனர். எனவே இந்த படம் சீனாவிலும் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.