close
Choose your channels

47 வயது பாக்யராஜ் பட நாயகிக்கு மறுமணமா? அவரே  அளித்த விளக்கம்!

Wednesday, January 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாக்யராஜ் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்த நடிகை ஒருவர் 47 வயதில் திருமணமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கே பாக்யராஜ் நடித்து இயக்கிய ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. இவர் அதன் பின்னர் விஜயகாந்த் நடித்த ‘பெரியமருது’ உட்பட ஒரு சில படங்களில் நாயகியாகவும் அக்கா அண்ணி அம்மா வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரகதி தனது இருபதாவது வயதில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதை அடுத்து ஒரு சில ஆண்டுகளில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். தனது இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ள நிலையில் தற்போது இவர் மறுமணம் செய்யப் போவதாக கூறப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்த அவர், ‘எனக்கு தற்போது 47 வயதாகிறது, இந்த வயதில் மறுமணம் என்பது யோசித்து கூட பார்க்க முடியவில்லை. தனிமையாகவே இதுவரை இருந்து விட்டேன். இனி மேல் ஒரு துணையை தேடுவது எனக்கு சரியாக இருக்காது. பல சிக்கல்களை நான் தனியாகவே சந்தித்து, அதில் இருந்து மீண்டு இருக்கின்றேன். எனவே இனிமேலும் நான் துணை தேட விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.