close
Choose your channels

9ஐ அடுத்து 95. சிம்பு-ஆதிக் படத்தின் ஆச்சர்யம்

Saturday, June 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா 9 பாடல்களை கம்போஸ் செய்யவுள்ளதாகவும் நேற்று வெளியான செய்திகளை பார்த்தோம்
இந்நிலையில் இந்த படத்திற்காக சிம்பு பெரிய மீசையும், தாடியும் வைக்கவுள்ளதாகவும், அதுமட்டுமின்றி அவர் தன்னுடைய உடல் எடையை 95 கிலோவாக அதிகரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை சிம்புவை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டதால் இயக்குனரின் உடல் எடை அதிகரிப்பு உள்பட அனைத்து வேண்டுகோள்களையும் எந்தவித கேள்வியும் கேட்காமல் சிம்பு ஒப்புக்கொள்வதாக கூறப்படுகிறது.
இன்னும் ஒருசில நாட்களில் மைசூரில் தொடங்கப்படவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை வெகுவிரைவில் முடித்துவிட்டு மீண்டும் ஜி.வி.பிரகாஹூடன் இணைந்து மீண்டும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா பாணியில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக ஆதிக் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.