close
Choose your channels

விஜய் வீட்டு வாசலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: விமர்சகர்களுக்கு பதிலடியா?

Wednesday, August 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் வீட்டின் வாசலில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரை விமர்சனம் செய்தவர்களுக்கான பதிலடியாக இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்பதும் அவரது திரைப்படம் வெளியாகும் தினம் அவரது ரசிகர்களுக்கு திருவிழாபோல் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரை விமர்சிப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

குறிப்பாக ஒரு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் விஜய்யை குறிப்பிடும்போது ஜோசப் விஜய் என அவரை அவரது மத அடையாளத்தையும் சேர்த்து குறிப்பிட்டு வருவது பெரும் சர்ச்சையாக உள்ளது.

இவ்வாறு தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் தனது வீட்டின் முன்னர் அம்மன் மற்றும் விநாயகர் சிலையை வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஏற்கனவே விஜய் பல மேடைகளில் ’நான் கோவிலுக்கும் போவேன், மசூதிக்கும் போவேன், சர்ச்சுக்கும் போவேன்’ என்று கூறியிருந்தார். அவர் கூறியதை தற்போது தன்னுடைய வீட்டின் வாசல்லிலேயே நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.