close
Choose your channels

வங்கக்கடல் பின்னணி, கண்ணாடியில் செட்: விக்கி-நயன் திருமணம் குறித்த ஆச்சரிய தகவல்கள்!

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜூன் 9ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் திருமணம் செய்ய உள்ளனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட ஒருசில அரசியல்வாதிகளுக்கும் பல திரையுலக பிரமுகர்களுக்கும் ஏற்கனவே திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் குறித்த சில தகவல்கள் ஊடகங்களில் கசிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாபலிபுரத்தில் வங்கக்கடல் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மண்டபத்தில்தான் விக்கி-நயன் திருமணம் நடைபெற இருப்பதாகவும், முகூர்த்த நேரம் சரியாக காலை 08.30 மணிக்கு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திருமணத்திற்காக மூன்று நாட்கள் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மெஹந்தி உள்பட அனைத்து சடங்குகளும் நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் பிரபலங்களான அனுஷ்கா சர்மா. காத்ரீனா கைப் ஆகியோர்களின் திருமணம் போன்று பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திருமண வீடியோவை கவுதம் மேனன் இயக்க இருப்பதாகவும் இந்த திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.