close
Choose your channels

மாஸ் நடிகர்களுக்கு இணையாக சமந்தாவுக்கு கட்-அவுட்: கெத்து காட்டும் ரசிகர்கள்

Wednesday, July 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக்கும்போது அவர்களது ரசிகர்கள் திரையரங்குகளில் விண்ணை முட்டும் கட் அவுட்டுக்களை வைத்து அசத்துவது தெரிந்ததே. ஆனால் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கும் படங்களுக்கு பெரும்பாலும் இதுபோன்ற கட் அவுட்டுக்கள் வைப்பதில்லை. அனுஷ்கா, நயன்தாரா நடித்த ஒருசில படங்கள் வெளியாகும்போது மட்டும் கட் அவுட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த 'ஓ பேபி' திரைப்படம் வரும் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்த்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் சமந்தாவுக்கு பிரமாண்டமான கட் அவுட்டுக்களை வைத்து அவரது ரசிகர்கள் கெத்து காட்டியுள்ளனர்.

திருமணமான ஒரு நடிகைக்கு இந்த அளவுக்கு மாஸ் இருப்பது தென்னிந்திய திரையுலகிற்கு புதியதாக பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சமந்தாவுக்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.