close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா அர்ஜூன்?

Thursday, July 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் என்பதும் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 5வது சீசனிலும் அவர்தான் தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான நிகழ்ச்சி ஒன்றை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சர்வதேச அளவில் புகழ் பெற்ற ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சி விரைவில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வீட்டிற்குள் இருப்பது போன்று ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் விதிப்படி ஆளில்லாத தனித்தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தமிழில் முதல் முதலாக ஜீ டிவியில் ஒளிபரப்பாக உள்ளது

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தனித்தீவில் போட்டியாளர்கள் சாகசம் செய்யும் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அர்ஜுன் தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.