close
Choose your channels

காமெடி நடிகருக்குள் ஒளிந்திருக்கும் அபார திறமை: வைரலாகும் புகைப்படங்கள் 

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் பிரம்மானந்தம் என்பதும், இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் இவரது காமெடிகள் ரசிகர்களை மிகச் சிறந்த அளவில் ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் தெரிந்ததே.

தெலுங்கு திரையுலகை பொருத்தவரை பிரம்மானந்தம் நடிக்காத படமே மிகவும் குறைவு என்ற அளவிற்கு ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் பிரம்மானந்தம் அவர்களை அனைவரும் ஒரு காமெடி நடிகராக தான் இதுவரை பார்த்திருக்கிறோம், ஆனால் அவருக்குள் ஒளிந்திருக்கும் அபார திறமை ஒன்று தற்போது புகைப்படங்களாக வெளிவந்து வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் பிரம்மானந்தம் அவர்கள் பென்சிலால் ஓவியம் வரைவதில் திறமையானவர் என்று அவர் வரைந்த ஓவியங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருவதில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பாக அவர் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியம் அச்சுஅசலாக வெங்கடாஜலபதியை நேரில் பார்த்த மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல் அவர் வரைந்த அனுமார் ஓவியம் ஒன்றும் உள்ளத்தைக் கவரும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காமெடி நடிகரின் உள்ளே இவ்வளவு பெரிய திறமை ஒளிந்திருக்கிறதா? என்று ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.