close
Choose your channels

நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்!

Sunday, May 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட திரை நட்சத்திரங்களான குஷ்பூ, ஸ்ரீபிரியா, சினேகன், மயில்சாமி, உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பின்னடைவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்த நடிகர் மன்சூர் அலிகான்தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 41 என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள் நிலையில் மூன்றாவது சுற்று முடிவில் மன்சூர் அலிகான் வெறும் 41 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அவரது தரப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் 14 ஆயிரத்து 875 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.