close
Choose your channels

முதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்!

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகை இயக்குனர்களுக்கு கேங்க்ஸ்அர் படம் என்றாலே அது வடசென்னையை பின்னணியாக வைத்து உருவாக்கப்படுவது தான் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படமும் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஹீரோ அவதாரம் எடுத்தபோதிலும் இதுவரை காமெடி கதைகளை மட்டுமேஎ தேர்வு செய்து நடித்து வந்த சந்தானம் முதல் முறையாக ஆக்சன் களத்தில் இறங்க உள்ளார் இந்த படம் அஜித், விஜய் சூர்யா பாணியில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்றும் இந்த படம் சந்தானத்திற்கு ஒரு புதிய திருப்பத்தை தரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சந்தானம் நடித்து வெற்றி பெற்ற ‘ஏ1’ படத்தின் இயக்குனர் ஜான்சன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தை இதுவரை காமெடி நாயகனாகவே பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென அவரை ஆக்சன் நாயகனாக ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.