close
Choose your channels

பேரக்குழந்தைகளுடன் நடிகர் செந்தில்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, September 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வரும் செந்தில் தனது பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 40 வருடங்களாக திரையுலகில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்பதும், அவைகளில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி - செந்தில் காமெடிக்காகவே பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தூரல் நின்னு போச்சு மலையூர் மம்பட்டியான், நட்பு, பாய்ஸ் போன்ற படங்களில் அவருக்கு வித்தியாசமான கேரக்டர்களும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் செந்தில் கடந்த 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு ஆகிய 2 மகன்களும் 2 பேரக்குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கி வரும் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.