close
Choose your channels

சொல்லவே தேவையில்லை: விஜய்சேதுபதி படத்தை விமர்சனம் செய்த நடிகர் செளந்தர்ராஜா

Wednesday, May 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று ’க/பெ ரணசிங்கம்’. விஜய்சேதுபதியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் இந்தப் படத்தை குணசித்திர நடிகர் பெரிய கருப்புத்தேவர் மகன் விருமாண்டி இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் திடீரென ஊரடங்கு அமலுக்கு வந்தது. தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை தொடரலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் பின்னணி இசைப்பணியை இசையமைப்பாளர் ஜிப்ரான் தொடங்கியுள்ளார்.

ஜிப்ரான் இந்த படம் குறித்து கூறியபோது, ‘அறம்’ படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படம் ’க/பெ ரணசிங்கம்’. இந்த படத்தில் பணிபுரிவதை பெருமையாக கருதுகிறேன். விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு மிக அருமை என்று கூறியிருந்தார்.

ஜிப்ரானின் இந்த டுவீட் குறித்து நடிகர் செளந்தர்ராஜா கூறுகையில், ‘இந்த படத்திற்காக நான் மிகவும் காத்திருக்கின்றேன். இந்த படத்தின் வெற்றிக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் எனது அன்புக்குரிய நண்பர்கள் என்பதை சொல்லவே தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, பவானிஸ்ரீ, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சண்முகம் முத்துசாமி வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.