close
Choose your channels

'கருப்பன் குசும்புக்காரன்' நடிகரின் பரிதாப நிலை: அதிர்ச்சி புகைப்படம்!

Monday, November 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல கிராமத்து திரைப்படங்களில் கிராமத்து கோவில்களின் பூசாரி ஆகவும் ’கருப்பன் குசும்புக்காரன்’ என்னும் வசனத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தவசி, பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து வந்த இவர் தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாத வகையில் உள்ளார். நடிகர் தவசியின் அடையாளமே முறுக்கு மீசையும் புன்சிரிப்பு முகமும் தான். ஆனால் தற்போது இவர் தலையில் மொட்டை அடிக்கப்பட்டு, மீசை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சி அளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும் இதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது அவரது மகன் திரையுலகினரின் உதவியை நாடி உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எத்தனையோ நடிகர் நடிகைகளுக்கு உதவிய திரையுலகினர் இவரது உடல்நிலை தேற நிதியுதவி செய்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.