close
Choose your channels

வடிவேலு குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்.. தாயார் மறைந்த சில மாதங்களில் மீண்டும் ஒரு இழப்பு..!

Monday, August 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமான நிலையில் தற்போது அவரது சகோதரர் காலமானது வடிவேலு குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வடிவேலுவின் தாயார் கடந்த ஜனவரி மாதம் காலமான நிலையில் இன்று நடிகர் வடிவேலுவின் உடன் பிறந்த சகோதரர் ஜெகதீஸ்வரன் என்பவர் காலமானார். இது அவரது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதான ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானதாகவும் தெரிகிறது.

வடிவேலு சகோதரர் ஜெகதீஸ்வரன் சிம்பு நடித்த ’காதல் அழிவதில்லை’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிறகு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இப்போது ஜவுளி கடை நடத்தி வந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அவர் காலமானார்.

சகோதரர் மறைவால் வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் திரையுலகினர் வடிவேலு குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.