close
Choose your channels

மூச்சு இருந்தாலும் பயம், மூச்சு நின்றாலும் பயம்.. வசந்த் ரவியின் 'அஸ்வின்ஸ்' டிரைலர்..!

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் வசந்த் ரவி நாயகனாக நடித்த ‘அஸ்வின்ஸ்’ என்ற திரைப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முழுக்க முழுக்க திரில் கதை அம்சம் கொண்ட இந்த ட்ரெய்லர் பின்னணியில் பேசும் வசனம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. அந்த வசனம் பின்வருமாறு: எல்லார் கிட்டயும் இரண்டு உயிர் இருக்கும், எல்லார் தலைக்குள்ளும் இரண்டு குரல் கேட்கும், ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கும், அந்த உலகில் மூச்சு இருந்தாலும் பயம் மூச்சு நின்றாலும் பயம்’

வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் இசையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

‘அஸ்வின்ஸ்’ என்றால் இரட்டை குதிரை முகம் கொண்ட கடவுள் என பொருள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.