close
Choose your channels

சென்சார் அதிகாரிகள் ஊழல் விவகாரம்.. நன்றி கூறிய நடிகர் விஷால்..!

Saturday, September 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்சார் அதிகாரிகள் ஊழல் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு சென்சார் செய்வதற்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறியிருந்தார். மேலும் லஞ்சம் வாங்கிய இரண்டு அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார்.

இதையடுத்து இது குறித்து மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைமை அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மகாராஷ்டிரா மாநில முதல்வரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பதும் மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லஞ்ச புகார் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்துக்கு நன்றி தெரிவித்த விஷால் ’ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேவையாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார்.

மேலும் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னை போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வை தருகிறது என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.