close
Choose your channels

அஜித்தின் 'பில்லா' படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவரா? மாஸ் புகைப்படங்கள்..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பில்லா’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் தான் அஜித் நடித்த ’பில்லா’ என்பதும் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

அஜித், நயன்தாரா, நமீதா உள்பட பலர் நடித்த இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படத்தில் இருந்து தான் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆக்சன் காட்சிகளில் மட்டுமின்றி கிளாமரிலும் நயன்தாரா இந்த படத்தில் கலக்கி இருந்தார்

குறிப்பாக நயன்தாரா முதல்முறையாக இந்த படத்தில் பிகினி அணிந்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா ஷெட்டி நயன்தாராவின் கேரக்டரில் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பில்லா’ திரைப்படத்தில் நயன்தாரா கேரக்டரில் முதலில் நடிப்பதற்கு ஒப்பந்தமானவர் நடிகை அசின் என்று தெரிகிறது. இந்த படத்திற்காக அசின் எடுத்த டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகின. இந்த படத்தில் அசின் நாயகியாக நடிக்க இருந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதை அடுத்து இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.