close
Choose your channels

முதல்முறையாக குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய பூர்ணா.. க்யூட் புகைப்படங்கள்- வீடியோ..!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பூர்ணாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை பூர்ணா. அதன்பின் அருள்நிதியின் ’தகராறு’ சூர்யாவின் ’காப்பான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு அவர் கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சற்று முன் அவர் தனது குழந்தையை கணவருடன் கொஞ்சும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.