close
Choose your channels

அஜித் போகும் நாடுகளுக்கு பின்னாடியே செல்லும் பிரியங்கா மோகன்: வைரல் வீடியோ

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் சென்ற நாடுகளுக்கு நடிகை பிரியங்கா மோகனும் சென்று கொண்டிருப்பதாக வந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த சில நாட்களாக அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக அஜித் லண்டனில் இருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாரீஸ் ஈபிள் டவர் முன் அஜித் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வைரலானது.

இந்த நிலையில் நடிகை பிரியங்காமோகன் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரும் லண்டன் சென்றிருந்தார்.

லண்டனில் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது பாரிஸ் நகரில் ஈபில் டவர் முன் எடுக்கப்பட்ட வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.