close
Choose your channels

பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது.. த்ரிஷாவின் 'ராங்கி' டிரைலர்

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷா நடித்த ‘ராங்கி’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருக்கும் இந்த ட்ரெய்லரில் த்ரிஷாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கதையில் ’எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் த்ரிஷாவுடன் பிரபல மலையாள நடிகரான அனஸ்வர ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

சி சத்யா படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி த்ரிஷா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.