close
Choose your channels

ஜாக்கெட்டில் ஃபேன் வைத்த பிரபல நடிகை.. அடிக்கிற வெயிலுக்கு இது தேவைதான்..!

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து தற்போது வெளியில் போயிட்டு வந்தவுடன் பேனில் தான் உட்கார வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனது உடையில் ஃபேன் வைத்து டிசைன் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் பிரபலம் உர்ஃபி ஜாவித் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருக்கு நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அவ்வப்போது வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவற்றில் சில கிறுக்குத்தனமாக இருப்பதால் ரசிகர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறார் என்பதும் எனக்கு தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட்டின் இரண்டு பக்கமும் ஃபேன் டிசைன் வைத்து உருவாக்கி உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பின்னால் ஒருவர் வந்து முதுகுக்கு பின்னால் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்ய, முன் பகுதியில் உள்ள இரண்டு ஃபேன்கள் சுற்றுகின்றன.

அடிக்கிற வெயிலுக்கு இதுதான் சரியான காஸ்ட்யூம் என்றும் எங்களுக்கும் இதே போன்ற உடை ஏற்பாடு செய்யுங்கள் என்றும் இந்த வீடியோவுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.