close
Choose your channels

படப்பிடிப்பின்போது சேட்டை செய்த அதுல்யா! வைரலாகும் வீடியோ

Saturday, March 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'காதல் கண்கட்டுதே', 'கதாநாயகன்', 'ஏமாளி', 'நாகேஷ் திரையரங்கம் உள்பட ஒருசில படங்களில் நடித்த அதுல்யா ரவி, தற்போது சமுத்திரக்கனியுடன் அடுத்த சாட்டை', 'நாடோடிகள் 2' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அதுல்யா ரவி தற்போது ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த சாட்டை' படத்தின் படப்பிடிப்பின்போது படக்குழுவின் டெக்னீஷியன் ஒருவரின் காதை பிடித்து அதுல்யா இழுத்துள்ளார். காதை இழுத்தது அதுல்யா என்று தெரியாமல் அந்த நபர் அதிர்ச்சியுடன் திரும்பி அவரை பயமுறுத்த வர, ஆனால் அதுல்யா என்று தெரிந்ததும் சிரித்து கொண்டே சென்றவாறு இந்த வீடியோ உள்ளது. அதுல்யாவின் சேட்டையான இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வைரலாகி வருகிறது

அதுல்யா ரவி தற்போது 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' மற்றும் 'என் பெயர் ஆனந்தன்' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.