close
Choose your channels

அதிதி ஷங்கரின் 2வது படம்: முதல் நாள் படப்பிடிப்பின் புகைப்படங்கள்!

Friday, September 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் ஒப்பந்தம் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில் தற்போது அதிதிஷங்கர் இன்று முதல் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அதிதிஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று முதல் ’மாவீரன்’ படப்பிடிப்பில் கலந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பரத் சங்கர் இசையில் விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.