close
Choose your channels

லாக்டவுனுக்கு பின் முதல் 50வது நாள் படம்: 'மாஸ்டர்' படத்தை தெறிக்க வைக்கும் ரசிகர்கள்! 

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் ’மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்தது என்பதும் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ரசித்து பார்த்தார்கள் என்பது தெரிந்ததே

லாக்டவுன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் திரையரங்குகள் திறந்த பின்னரும் பார்வையாளர்கள் வராமல் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் அவதி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் மீண்டும் பொது மக்கள் திரையரங்குகளுக்கு வர தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ படத்தின் 50வது நாள் ஹேஷ்டேக்கான #Master50Days என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்து வருகின்றனர்

’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியான போதிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை கடந்துள்ளது மிகப்பெரிய ஆச்சரியமாக கோலிவுட் திரையுலகில் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் ’மாஸ்டர்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.