close
Choose your channels

பாவனியை அடுத்து முத்த சர்ச்சையில் சிக்கிய அக்சரா!

Tuesday, December 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாவனிக்கு அமீர் திடீரென முத்தம் கொடுத்தார் என்பதும் இது குறித்து கமல்ஹாசன் அல்லது பிக்பாஸ் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த விஷயத்தை இருவருமே மிக எளிதாக கடந்து சென்றது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடதக்கது.

அமீர் திடீரென கொடுத்த முத்தத்துக்கு பாவனியும் பெரிதாக ரியாக்ட் செய்யாதது பார்வையாளர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அமீர்-பாவனி முத்த சர்ச்சை இன்னும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது அக்சரா வருணுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய எபிசோடில் வருணுக்கு அக்சரா நச்சென முத்தம் கொடுத்த காட்சியை பார்த்த ரசிகர்கள் இன்னொரு காதல் ஜோடியா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அக்சரா மற்றும் வருண் முத்த விவகாரம் எந்த அளவிற்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.