close
Choose your channels

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து இந்த நடிகருக்கும் வில்லனாகும் விஜய்சேதுபதி!

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோரது படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’, தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே கார்த்தி நடித்த ’நான் மகான் அல்ல’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்த நிலையில் தற்போது 12 வருடம் கழித்து மீண்டும் கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.