close
Choose your channels

ரஜினியை அடுத்து 'மஹான்' படத்தை பார்த்த விஜய்: என்ன சொன்னார் தெரியுமா?

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் , துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘மஹான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் விமர்சகர்களாலும், ஊடகங்களாலும் பாராட்டப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் என்பதையும் இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தளபதி விஜய், ‘மஹான்’ படத்தை பார்த்து தயாரிப்பாளர் லலித் அவர்களுக்கு போன் செய்து பாராட்டிதாகவும், தனது வாழ்த்துக்களை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு தெரிவித்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, விஜய் பாராட்டு மழையால் கார்த்திக் சுப்பராஜ் உள்பட படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.