close
Choose your channels

மீண்டும் இணைகிறார்களா கமல்-உதயநிதி?

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றது என்பதும் இந்த படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் மூலம் இணைந்த கமல் - உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 54வது படத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படக்குழுவினர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் லைகாவிடம் இருந்து வாங்கி தயாரிப்பை தொடர உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.