close
Choose your channels

பாலிவுட்டில் எண்ட்ரி ஆகிறார் 'அட்டக்கத்தி' நடிகை

Monday, March 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான 'அட்டக்கத்தி' படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஐஸ்வர்யா, அதன் பின்னர் தனுஷின் 'காக்கா முட்டை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த பெரும்புகழ் பெற்றார்.

சமீபத்தில் வெளியான 'ஆறாது சினம்' படத்தில் தனது வழக்கமான முத்திரை நடிப்பை அளித்த ஐஸ்வர்யா, இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், திபாவளி துப்பாக்கி, ஹலோ நான் பேய் பேசுகிறேன். தர்மதுரை, மனிதன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முதலாக ஐஸ்வர்யா ராஜேஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ரம்பால் நடிக்கவுள்ள படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.