close
Choose your channels

'கட்டா குஸ்தி' படத்திற்காக வேற லெவலில் வொர்க்-அவுட் செய்த ஐஸ்வர்யா லட்சுமி

Saturday, December 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் பட்ஜெட்டை விட இரு மடங்கு வசூல் செய்து தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'கட்டா குஸ்தி’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு சிறப்பான கேரக்டர் என்றும் அந்த கேரக்டரில் அவர் மிகவும் பொருத்தமாக நடித்து இருந்தார் என்ற விமர்சனங்கள் வந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தனது கேரக்டருக்காக வொர்க் அவுட் செய்வதில் எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளார் என்பதை வீடியோ ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: 'கட்டா குஸ்தி’ படத்திற்கு மூன்று மாதங்கள் நிறைய வியர்வையுடன் கூடிய ஒர்க் அவுட் செய்தேன். குறிப்பாக இந்த வொர்க்-அவுட் முழுவதிலும் சிரித்து சிரித்து எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வந்தது.

என்னுடைய ஒர்க்கவுட் பயிற்சியாளருக்கு எனது நன்றி. படப்பிடிப்பில் இருந்த போதும் சரி, ஆன்லைன் பயிற்சியின் போதும் சரி இந்த கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரிப்பது ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன். தற்போது அதில் நான் பெருமைப்படுகிறேன். நம்முடைய உடல் மாறுவதை பார்ப்பது மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி இது சாதாரண காரியமல்ல. ஒரு உண்மையான விளையாட்டிற்காக என்னால் முடிந்த அளவு இந்த படத்திற்காக நான் வொர்க் அவுட் செய்தேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.