close
Choose your channels

'புஷ்பா' ராஷ்மிகா மந்தனா குறித்த சர்ச்சை கருத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்..!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி கேரக்டரில் நடித்திருந்தால் ராஷ்மிகா மந்தனாவை விட அந்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நான்‌ திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள்‌ என்‌ மீது பொழிந்து வரும்‌ நிபந்தனையற்ற அன்புக்கும்‌, எனது அனைத்து படங்களுக்கும்‌ நீங்கள்‌ அளித்து வரும்‌ பேராதவிற்கும்‌, முதலில்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்‌.

என்‌ மீதும்‌, என்‌ பணியின்‌ மீதும்‌ அன்பைத்‌ தவிர வேறு எதுவும்‌ செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும்‌, அழகான பார்வையாளர்களையும்‌ பெற்றிருப்பதை நான்‌ பெரும்‌ பாக்கியமாக கருதுகிறேன்‌.

அண்மையில்‌ ஒரு நேர்காணலின்போது என்னிடம்‌, தெலுங்கு திரையுலகில்‌ நான்‌ எந்த மாதிரியான வேடங்களில்‌ நடிக்க விரும்புகிறேன்‌ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில்‌, ”எனக்கு தெலுங்கு திரையுலகம்‌ மிகவும்‌ பிடிக்கும்‌. எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள்‌ கிடைத்தால்‌ நிச்சயமாக தெலுங்கு படங்களில்‌ நடிப்பேன்‌, உதாரணத்திற்கு புஷ்பாவில்‌ வரும்‌ ஸ்ரீவள்ளி கதாபாத்திரம்‌ எனக்கு மிகவும்‌ பிடிக்கும்‌ 'என பதிலளித்தேன்‌.

இருப்பினும்‌ துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில்‌ தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில்‌ நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின்‌ கடின உழைப்பை நான்‌ ஒரு போதும்‌ குறை கூறவில்லை.

இதனால்‌ ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்‌. ராஷ்மிகா மந்தானாவின்‌ பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம்‌ மட்டுமே உண்டு என்பதையும்‌, திரையுலகைச்‌ சார்ந்த சக நடிகர்‌ நடிகைகள்‌ மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

என்னிடம்‌ கேட்கப்பட்ட கேள்விக்கு, நான்‌ உதாரணமாக கூறிய பதில்‌ தவறாக புரிந்து கொள்ளப்பட்டூள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.