மாலத்தீவின் மாயாஜாலத்தை கண்டு ரசித்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் புகைப்படம்!
பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் குட்டி விமானத்தில் மாலத்தீவின் அழகை கண்டு ரசித்த வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அவர் சமீபத்தில் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தில் மாலத்தீவில் சூரிய அஸ்தமன குறித்த காட்சி உள்ளது. இந்த புகைப்படம் குறித்து அவர் கருத்து கூறிய போது ’மாலத்தீவில் சூரிய அஸ்தமனம் ஆவதை பார்ப்பது உண்மையிலேயே மாயாஜாலம். அதை நான் கண்டு ரசித்தேன். நீலநிற கடல் நீரில் சூரியன் விழுவதை பார்ப்பது பரவசமானது. அதனை நான் என்னை அறியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த அனுபவம் மிகவும் அற்புதமானது
கண்டிப்பாக எல்லோரும் மாலத்தீவுக்கு ஒருமுறையாவது செல்லுங்கள். இந்த அழகிய சூரிய அஸ்தமனத்தை பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படமும் அவருடைய பதிவும் தற்போது வைரலாகி வருகிறது