close
Choose your channels

ரஜினிகாந்த் மனைவியாக அஜித், தனுஷ் பட நடிகையா? 'தலைவர் 170' சூப்பர் அப்டேட்..!

Saturday, September 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ரஜினிகாந்த் மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்தின் ’துணிவு’ மற்றும் தனுஷின் ’அசுரன்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தின் கதை, போலி என்கவுண்டர் குறித்தது என்றும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் இந்த கதை நடப்பதாக படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப்பச்சன், ரானா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.