close
Choose your channels

மே 1ஆம் தேதி அஜித்தின் 2 படங்கள் ரீரிலீஸ்.. ஆனாலும் 'மங்காத்தா' மிஸ் ஆகுதே..!

Saturday, April 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அஜித் ரசிகர்களும் ’பில்லா’ ’மங்காத்தா’ உட்பட சில படங்களை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அஜித்தின் இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அவர் நடித்த ’பில்லா’ ’மங்காத்தா’ ’நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் சில வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி மே ஒன்றாம் தேதி அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான ’பில்லா’ மற்றும் அஜித் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’தீனா’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இருப்பினும் ’மங்காத்தா’ படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் இப்போதைக்கு ரீரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை’ படத்தையும் ரீரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இருப்பினும் மே ஒன்றாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகாது என்றாலும் அதன் பிறகு ஒரு சில வாரங்கள் கழித்து ரீரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

புதிய திரைப்படங்களுக்கு இணையாக பழைய சூப்பர் ஹிட் படங்கள் வசூல் செய்து வருவதை அடுத்து மேலும் பல படங்கள் ரீரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.