close
Choose your channels

'விடாமுயற்சி' படப்பிடிப்பு எப்போது? அஜித் ரசிகர்களுக்கு செம்ம குஷியான தகவல்..!

Tuesday, May 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’விடாமுயற்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகவும் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் லைகா நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்று ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2-வது வாரம் தொடங்கும் என்றும் அஜித் இந்த படத்திற்காக லுக் டெஸ்ட் எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்றும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சில முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பை முடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos