close
Choose your channels

துபாய் எக்ஸ்போவில் திரையிடப்பட்ட அஜித் படம்: கொண்டாடும் ரசிகர்கள்!

Saturday, March 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாய் எக்ஸ்போவில் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் திரையிடப்பட்டதை அடுத்து அதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக துபாயில் எக்ஸ்போ நடைபெற்று வருகிறது என்பதும் இந்த எக்ஸ்போவில் கலந்துகொள்ள பல திரையுலக பிரபலங்கள் துபாய் சென்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே .

இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியான எக்ஸ்போவில் இந்தியாவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ திரைப்படம் திரையிடப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்த ’விஸ்வாசம்’ திரைப்படம் துபாயில் திரையிடப்பட்ட தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.