close
Choose your channels

'வலிமை' படத்தை பார்த்தாரா அஜித்? வைரலாகும் புகைப்படம்!

Friday, February 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று வெளியான தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட பதிப்புகளின் ட்ரெய்லர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தின் பின்னணியில் ’வலிமை’ படம் திரையில் ஓடிக் கொண்டிருப்பது போன்றும் அதற்கு முன் அஜித், இயக்குனர் வினோத் உடன் இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து ’வலிமை’ திரைப்படத்தை அஜித் பார்த்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’வலிமை’ படத்தின் இறுதிகட்ட பணிகளையும் அஜித் நேரில் சென்று பார்த்ததாகவும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.